சாம்பியன் லீக் கால்பந்து : பிஎஸ்ஜி அணியை வீழ்த்தியது மான்செஸ்டர் சிட்டி ….!!!

சாம்பியன் லீக் கால்பந்து தொடரில் இன்று நடந்த ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி வெற்றி பெற்றுள்ளது.

சாம்பியன் லீக் கால்பந்து தொடரில் இன்று நடந்த ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி- (பிஎஸ்ஜி)  பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் ஆகிய அணிகள் மோதின. இதில் முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதையடுத்து 2-வது பாதி ஆட்டத்தில் 50-வது நிமிடத்தில் பிஎஸ்ஜி அணி வீரர்  கிலியன் எம்பாப்பே முதல் கோல் பதிவு செய்தார்.

இதனால் பிஎஸ்சி அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மான்செஸ்டர் சிட்டி அணி வீரர்  ரஹீம் ஸ்டெர்லிங் 63-வது நிமிடத்தில் கோல் அடிக்க , இதைத்தொடர்ந்து கேப்ரியல் ஜீசஸ் 76-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இறுதியாக மான்செஸ்டர் சிட்டி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *