தூங்கி கொண்டிருந்த சிறுமி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தை தேரோட்ட திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் குடும்பத்துடன் கலந்து கொண்டார். இந்நிலையில் இரவு தூங்கிக் கொண்டிருந்த போது ராஜாவின் மகள் அருள் பிரியாவின் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர் திருடி சென்றுவிட்டார். இதுகுறித்து ராஜா உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.