நடைபயிற்சிக்கு சென்ற பெண்…. வாலிபர் செய்த செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்த பெண்ணிடம் மர்ம நபர் தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்திலுள்ள எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் சரவணகுமார்-பாரதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் பாரதி தனது வீட்டிலிருந்து பஞ்சப்பூரில் உள்ள பசுமை பூங்காவுக்கு நடைபயிற்சி சென்று வருவது வழக்கம். இந்நிலையில் பாரதி நடைபயிற்சி செய்து கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் ஒரு வாலிபர் அவரை பின்தொடர்ந்து சென்றுள்ளார்.

இதனையடுத்து அந்த வாலிபர் பாரதி அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இது குறித்து பாரதி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *