கோவிலுக்கு சென்ற போது…. பெண்ணுக்கு நடந்த கொடுமை…. வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மதுரை மாவட்டத்திலுள்ள பேச்சியம்மன் படித்துறை பகுதியில் கணபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்திரா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சந்திரா தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் கோவிலுக்கு நடந்து சென்றுள்ளார். இதனையடுத்து அவரை பின்தொடர்ந்து சென்ற மர்ம நபர்கள் சற்றும் எதிர்பாராத சமயத்தில் சந்திராவின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலிச் சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இது குறித்து சந்திரா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பெண்ணிடமிருந்து நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *