வாந்தி வருவது போல் நடிப்பு….பேருந்தில் பெண்கள் செய்த செயல்…. போலீஸ் வலைவீச்சு…!!

மூதாட்டியிடம் இருந்து 2 பெண்கள் நகையை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள செட்டிபாளையம் பகுதியில் சின்னசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வேலுமணி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வேலுமணி தனது மகளை பார்ப்பதற்காக காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து அரசு பேருந்தில் ஏறியுள்ளார். இந்த பேருந்தில் இரண்டு பெண்கள் ஏறியுள்ளனர். இதனை அடுத்து வேலுமணியின் அருகில் அமர்ந்திருந்த பெண் தனக்கு வாந்தி வருவதாக கூறியுள்ளார். எனவே ஜன்னலை திறக்க வேண்டும் என்று கூறி அந்தப் பெண் நடித்ததால் வேலுமணி சற்று ஒதுங்கி உள்ளார்.

அப்போது ஜன்னலைத் திறப்பது போல் நடித்த பெண்கள் வேலுமணியின் கழுத்தில் அணிந்திருந்த 2 1/2 பவுன் தங்க தாலி சங்கிலியை நைசாக திருடி விட்டனர். இதனைத் தொடர்ந்து அந்த 2 பெண்களும் இறங்கிய பிறகு வேலுமணி தனது கழுத்தில் கிடந்த தங்க சங்கிலி காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வேலுமணி அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 2 பெண்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *