“செயினை பறித்துக் கொண்டு ஓடிய 3 பேர்” மடக்கிப் பிடித்த பொதுமக்கள்…. போலீஸின் அதிரடி நடவடிக்கை….!!!

சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடிய 3 வாலிபர்களை மடக்கிப் பிடித்து பொதுமக்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொன்னமராவதி பகுதியில் தாயம்மாள் என்பவர் வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் அவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோட முயற்சி செய்துள்ளனர். அப்போது தாயம்மாவின் அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த பொதுமக்கள் 3 பேரையும் மடக்கி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

பின்னர் காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் மதுரையை சேர்ந்த சரவண பாண்டி, விஷ்ணுகுமார், அன்பழகன் ஆகிய 3 பேர் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *