ரேஷன் கடைக்கு சென்ற மூதாட்டி…. வழியில் நடந்த சம்பவம்…. காஞ்சியில் பரபரப்பு….!!!

பட்டப்பகலில் மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில் தெருவில் யசோதா அம்மாள் வசித்து வருகின்றார். இவர் அதே பகுதியில் அமைந்துள்ள ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த யசோதா அம்மாள் அருகில் உள்ள பெரிய காஞ்சிபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *