பைக்கில் வேகமாக வந்த 2 பேர்…. பெண்ணிற்கு நடந்த கொடுமை…. வலைவீசி தேடும் போலீஸ்….!!

பெண்ணிடம் 5 பவுண் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூரில் உமாபதி என்பவர் வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் டீக்கடை நடத்தி வருகின்றார். இவரது மனைவி மகேஸ்வரி அதன் அருகிலேயே போண்டா கடை நடத்திவருகிறார். இந்நிலையில் இருவரும் வியாபார முடிந்தவுடன் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் மகேஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுண் தங்க சங்கிலியை அறுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். எனவே அருகிலுள்ள கே.வி குப்பம் காவல்நிலையத்தில் மகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *