வெளியே நின்று கொண்டிருந்த பெண்…. மர்ம நபர்களின் கைவரிசை…. தீவிர விசாரணை நடத்தும் போலீஸ்….!!

செடிக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த பெண்ணிடம் தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டையில் பாமா என்பவர் வசித்து வருகின்றார். இவர் தனது வீட்டின் முன்பு உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பாமா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலி செயினையும், ஒரு பவுண் சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

எனவே இது பற்றி அருகில் உள்ள காவல்நிலையத்தில் பாமா  புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *