BREAKING : ”மத்திய பல்கலைக்கு விடுமுறை” மாணவர்கள் மகிழ்ச்சி ….!!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள தொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதித்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மாநிலம் முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மக்கள் அதிகமாக கூட கூடாது என்று மத்திய சுகாதாரதுறை அமைச்சகம் வலியுறுத்திய நிலையில் தமிழகத்தில் உள்ள தொடக்க பள்ளிகளுக்கு நாளை முதல் 31ஆம் தேதி வரை விடுமுறை என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து தமிழக்த்தில் உள்ள திரையரங்கம் , வணிக வளாகம் ஆகியவற்றிற்கும் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதபடுத்த தமிழக அரசு ரூ 60 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்நிலையில் திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்திற்கு வரும் 31ஆம் தேதி வரை விடுமுறை என்று பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.