இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பை உடைத்த மத்திய அரசு…. கமல்ஹாசன் குற்றசாட்டு…!!

இந்திய நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பை மத்திய அரசு உடைத்து விட்டது என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கும் சேர்த்து வாக்குப்பதிவு நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . அறிவிப்பு வெளியாகியதும் தமிழகத்தின் பிரதான கட்சிகள் கூட்டணி வியூகங்களை வகுக்க ஆரம்பித்து கூட்டணியை முடிவு செய்தனர்.தமிழகத்தை பொறுத்தவரை திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி , அதிமுக தலைமையிலான கூட்டணி  , அமமுக , நாம் தமிழர் மற்றும் மக்கள் நீதி மய்யம் என ஐந்து முனை போட்டி நீடிக்கிறது.இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் கோவை கொடீசியா மைதானத்தில் இறுதிக் கட்ட மக்களவை வேட்பாளர் பட்டியல் மற்றும் தேர்தல் அறிக்கை வெளியீடப்பட்டது .

Image result for மக்கள் நீதி மய்யம்

இதில் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் அறிமுக பொதுக் கூட்டமும்  நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறுகையில் , நாட்டின் பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட நாள்  பலருக்கு இறப்பு நாள் .  ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மாவோயிஸ்ட்கள் கலந்துவிட்டதாக அரசியல் சாயம் பூசினார்கள் . திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி கிடையாது எனக் கூறிவந்த பாமக அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது என்று விமர்சித்தார்.மேலும் அவர் பேசும் போது , தமிழக விவசாயிகளை டெல்லியில் நிர்வாணமாக போராட்டம் நடத்த நிற்க வைத்தது தான் திராவிடக் கட்சிகளின் சாதனையா? என்றும் கேள்வி எழுப்பிய கமல் இந்திய நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பை, மத்திய அரசு உடைத்துவிட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.