இதெல்லாம் ரொம்ப குறைஞ்சிட்டு…. கட்டுப்படுத்திய ராணுவ படை… மத்திய அரசு தகவல்…!!

2020 ஆம் ஆண்டில் ஊடுருவல் முயற்சிகள், பயங்கரவாத வன்முறைகள் மிகவும் குறைந்து விட்டதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லியில் நடைபெற்ற மாநிலங்களவையில் உள்துறை இணை மந்திரி கிஷன் ரெட்டி கூறும்போது, கடந்த 2019 ஆம் ஆண்டு எல்லையில் பாகிஸ்தான் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் 127 பேர் காயமடைந்தனர் என தெரிவித்துள்ளார். இதனையடுத்து 71 பேர் 2020ஆம் ஆண்டில் நடந்த தாக்குதலால் காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதோடு 2019 ஆம் ஆண்டில் 216 ஊடுருவல் முயற்சிகளும், 2020ஆம் ஆண்டில் 99 ஒருவர் முயற்சிகளும் நடைபெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து 2019 ஆம் ஆண்டில் 157 பயங்கரவாதிகளும், 2020 ஆம் ஆண்டில் 221 பயங்கரவாதிகளும் இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்டனர் என கூறியுள்ளார். அதன் பின் 2019 ஆம் ஆண்டு பயங்கரவாத வன்முறை தொடர்பான 594 வழக்குகளும், 2020ஆம் ஆண்டில் 244 வழக்குகளும் பதிவாகி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் 2019 ஆம் ஆண்டு 2009 கல்வீச்சு சம்பவங்களும், 2020 ஆம் ஆண்டு 327 சம்பவங்களும் நடைபெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் படிப்படியாக பயங்கரவாத வன்முறைகள், ஊடுருவல் முயற்சிகள் பாதிக்கும் மேல் இந்தியாவில் குறைந்திருப்பதாக மத்திய அரசு சார்பில் மந்திரி கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *