செம க்யூட்…. “மீனா மகளின் பிறந்தநாள் கொண்டாட்டம்”…. அதுவும் யார் கூட எங்க தெரியுமா…?

நைனிகா தனது பிறந்தநாளை ‘அண்ணாத்த’ ஷூட்டிங் ஸ்பாட்டில் கொண்டாடி இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை மீனா. இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். இதனையடுத்து இவர் வித்யாசாகர் என்பவரை 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்தார்.

தற்போது இவர்களுக்கு நைனிகா என்னும் மகள் உள்ளார். ”தெறி” படத்தின் மூலம் நைனிகா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இந்நிலையில், இவர் தனது பிறந்தநாளை ‘அண்ணாத்த’ ஷூட்டிங் ஸ்பாட்டில் கொண்டாடி இருக்கிறார். கடந்த வருடம் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தை மீனா தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *