“பிரபல செல்போன் கடையில் ரூ 6,00,000 மதிப்பிலான செல்போன்கள் திருட்டு “சென்னையில் பரபரப்பு !!..

சென்னையில் பிரபல செல்போன் கடையில் ரூ 6,00,000 மதிப்பிலான   செல்போன்களை   மர்ம நபர்கள் திருடி சென்ற  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

சென்னை திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் முகமது முஸ்தபா இவர் ஐயப்பாட்டை ரோட்டில் செல்போன் கடை நடத்தி வருகிறார் .இந்த நிலையில் கடந்த 18ம் தேதி முஸ்தபாவின் கடையில் ஷட்டரை உடைத்து 3 பேர் கொண்ட கும்பல் கடையின் உள்ளே இருந்த 94 ஆயிரம் பணம் மற்றும் ஆறு லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன்களை கொள்ளையடித்துச் சென்றனர்.

மேலும் கடைகளில் உள்ள நான்கு சிசிடிவி கேமராக்கள் சேதப் படுத்தப் பட்டிருந்தது. புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கொள்ளை  சம்பவத்தில் ஈடுபட்ட மதன் சுகுமார் மணிகண்டன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள விமல் என்பவனை தீவிரமாக தேடி வருகின்றனர்.