பிரபல பாடகர் உயிரிழப்பு…. அதிர்ச்சியில் மூழ்கிய திரையுலகம்…. பிரபலங்கள் இரங்கல்…!!

பிரபல பாடகர் உயிரிழந்த சம்பவம் பஞ்சாப் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் திரையுலகில் பிரபல பாடகராக இருப்பவர் தில்ஜான். இவர் தனது காரில் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து அவரது சொந்த ஊரான கார்தார்பூருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் ஓரமாக நின்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது தில்ஜானின் கார் வேகமாக மோதியுள்ளது.

விபத்தில் சிக்கி அப்பளம் போல் நொருங்கிய கார் - இளம் பாடகர் பரிதாப பலி

இந்த விபத்தில் படுகாயமடைந்த தில்ஜான் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இவரின் மறைவு பஞ்சாப் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவரது மறைவிற்கு பல திரை பிரபலங்களும் அவர்களது சமூக வலைதளப் பக்கத்தில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.