வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறையில் சிசிடிவி இயங்கவில்லை !! கரூரில் அதிர்ச்சி !!

கரூரில் ,  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில், சிசிடிவி கேமரா இயங்கவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது .

தளவாபாளையம் குமாரசாமி பொறியியல் கல்லூரியில் ,கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், திருச்சி மாவட்டம் மணப்பாறை, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை போன்ற 6 தொகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட  மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது .

cctv க்கான பட முடிவு

இதற்கிடையே , நேற்றிரவு வேடசந்தூர் தொகுதி மின்னனு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் , சிசிடிவி கேமரா இயங்காமல் இருந்ததாக  புகார் எழுந்துள்ளது .