சிபிஎஸ்இ ஆசிரியர்கள் மார்ச் 31 வரை வீட்டில் இருந்தே பணிபுரியலாம் – மனிதவள மேம்பாட்டுத்துறை அறிவிப்பு!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு இந்தியாவில் இதுவரை 290க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 300ஐ நெருங்கி கொண்டிருக்கிறது. மேலும் இந்த வைரஸுக்கு 4 இந்தியர்கள், ஒரு இத்தாலியர் என மொத்தம் 5 பேர் பலியாகியுள்ளனர்.

இதனால் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் பல்கலைக்கழகங்களில் நடைபெற இருந்த JEE மெயின் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதே போல சிபிஎஸ்இ பள்ளிகளில் நடைபெற்று வரும் தேர்வுகள் மார்ச் 31 வரை ஒத்திவைப்பு என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை ஏற்கனவே தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கையாக மார்ச் 31 வரை கல்லூரி, சிபிஎஸ்இ பள்ளி ஆசிரியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரியுமாறு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே மத்திய அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்து பணி புரியுமாறு கூறப்பட்டுள்ள நிலையில் மனிதவள மேம்பாட்டுத்துறை இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.