சிபிஎஸ்இ பொதுத்தேர்வு தேதி… மத்திய கல்வித்துறை அறிவிப்பு..!!

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மே 4 முதல் தொடங்கும் என மத்திய கல்வி துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார்.

மே 4ஆம் தேதி தொடங்கி ஜூன் 14ஆம் தேதி வரை சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஜூலை 15ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும். கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டு இருந்தது. சில மாதங்களில் பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளுக்கான சிறப்பு வகுப்புகள் நடத்த அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வகுப்புகள் பெரும்பாலும் நடத்தப்பட்டு வருகின்றது.

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தப் படுமா என்ற சந்தேகம் எழுந்த நிலையில் கட்டாயம் தேர்வு நடைபெறும் என்று மத்திய கல்வி துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தேர்வுகள் இணையவழி தேர்வுகள் அல்லாமல் தேர்வு மையங்களில் வந்து தேர்வு எழுத வேண்டும் எனவும் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *