CBSE 10,+12 தேர்வு அட்டவணை இன்று மே 18இல் வெளியீடு …!!

CBCSE 10 மற்றும் 12ஆம் வகுப்புக்கான தேர்வு அட்டவணை மே 18ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கல்வி நிறுவனங்கள் உட்பட மக்கள் கூடும் அனைத்தும் மூடப்பட்டன. இதனையடுத்து மாணவர்களுக்கான தேர்வு முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இதனிடையே பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வந்தது.பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொத்தேர்வின் முக்கியத்துவத்தை உணர்ந்த மத்திய அரசு 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தேர்வு நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.

அந்த வகையில் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இன்று மாலை 5 மணிக்கு சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து தற்போது, மேலும் கூடுதல் சில மாற்றங்கள் செய்யப்பட்டு இருப்பதால் மே 18ஆம் தேதி வெளியிடப்படும் என்று CBCSE  தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *