“பொள்ளாச்சி வீடியோ_வின் உண்மைத்தன்மை” யூடியூப் நிறுவனத்திற்கு CBCID கடிதம்…!!

பொள்ளாச்சி வீடியோ தொடர்பான வெளியானதில் இருக்கும் உண்மைத்தன்மையை அறிய யூடியூப் நிறுவனத்திற்கு CBCID போலீசார் தபால் எழுதியுள்ளனர்.

 

பொள்ளாச்சியில் ஒரு பாலியல் கும்பல்  கல்லூரி மாணவிகள் மற்றும் இளம் பெண்களை காதலித்து ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்து பணம் பறித்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது . மேலும் இவர்கள் வெளியிட்ட வீடியோ தமிழகம் முழுவதும் கோபத்தையும் , கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது . இந்த வழக்கில் திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு இந்த வழக்கை CBCID போலீசார் விசாரித்து வருகின்றனர்.

cbcid tamilnadu க்கான பட முடிவு

இந்நிலையில் சமீபத்தில்  ஒரு பெண் பேசும் ஆடியோ வெளியாகியது. அதில் திருநாவுக்கரசு வீட்டின் பின் புறம் சிறுமியை கொன்று புதைத்ததாக அந்த ஆடியோ_வில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் அந்த வீடியோ_வின் உண்மைத் தன்மையை அறியும் பொருட்டு, அந்த ஆடியோவை பதிவு செய்தவரின் தகவலை பெற இமெயில் வாயிலாக யூடியூப் நிறுவனத்திற்கு சிபிசிஐடி கடிதம் எழுதியுள்ளது. ஏற்கனவே பாலியல் வீடியோ_க்களை நீக்க கோரி CBCID போலீசார் கடிதம் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.