“பொள்ளாச்சி வீடியோ 90 சதவீத விடியோ நீக்கம்” யூடியூப் நிறுவனம் விளக்கம்….!!

பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக 90 சதவீத விடியோக்கள்   நீக்கபட்டு விட்டன என்று யூடியூப் விளக்கம் அளித்துள்ளது.

பொள்ளாச்சியில் ஒரு பாலியல் கும்பல்  கல்லூரி மாணவிகள் மற்றும் இளம் பெண்களை காதலித்து ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்து பணம் பறித்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது . மேலும் இவர்கள் வெளியிட்ட வீடியோ தமிழகம் முழுவதும் கோபத்தையும் , கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது . இந்த வழக்கில் திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு இந்த வழக்கை CBCID போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பொள்ளாச்சி க்கான பட முடிவு

இவர்கள் மீது கடுமையான தண்டனை  வேண்டுமென்று பொதுமக்கள் , உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் போராட்டம்  நடத்தி வந்தனர். மேலும் இதில் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருக்கின்றது என்று வழக்கு விசாரணையை CBI_க்கு மாற்றி உத்தரவிட்டது தமிழக அரசு. இந்நிலையில் சமீபத்தில் ஒரு பெண் பேசும் ஆடியோ யூடியூபில் வெளியாகியது. அதில் திருநாவுக்கரசு வீட்டில் சிறுமியை கொலை செய்து புதைத்துள்ளதாக தெரிவித்தது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது.

cbcid tamilnadu க்கான பட முடிவு

இந்நிலையில் CBCID போலீசார்  யூடியூப் நிறுவனத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் யூடியூபில் வெளியாகிய வீடியோ யாரால் பதிவேற்றபட்டது . அதன் உண்மை தன்மை என்ன உள்ளிட்ட விவரங்களை கேட்டு  கடிதம் எழுதி இருந்தனர். இதற்க்கு பதிலளித்த யூடியூப் நிறுவனம்  பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக 90% வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளன. மார்ஃபிங் செய்த ஒரு சில வீடியோக்கள் மட்டுமே இருக்கிறது என்று  யூடியூப் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.