காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் தொடங்கியுள்ளது……!!

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் தொடங்கி நடைபெற்று வருகின்றது.  

கர்நாடகா மாநிலம் தமிழகத்துக்கு ஆண்டுதோறும், காவிரியில் இருந்து 177.25 டி.எம்.சி., அளவு தண்ணீரை திறந்துவிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தண்ணீர் பங்கீட்டு அளவை  உறுதிப்படுத்துவதற்கு மற்றும்  தண்ணீரின் அளவு சரியாக வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிப்பதற்காகவும்  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு இரு மாநில பிரதிநிதிகளுடன்  ஆலோசனை கூட்டம் நடைபெறும்.

இந்நிலையில்  மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே டெல்லியில் மசூத் ஹூசைன் தலைமையில் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் தொடங்கியது. இதில்  தமிழகத்தில் குறுவை சாகுபடிக்காக கர்நாடக அணைகளில் இருந்து காவிரி நீர் திறக்கும்படியும், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஜீன் மாதத்துக்கான 9 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா திறக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளும் விடுக்கப்படவுள்ளன. மத்திய நீர்வள ஆணைய அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் தமிழக, கர்நாடக பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.