கேஸ் போடுவீங்கன்னு பயமா…! எங்களுக்கா ? துணிச்சலான திமுக… மிரள போகும் அதிமுக …!!

கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட காலத்திலும் திமுக மகளிரணி நாளை கண்டன பேரணி நடத்த இருக்கின்றது

உத்தரபிரதேச மாநிலத்தில் பட்டியலின இளம்பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இளம் பெண்ணின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்காமல் உத்தரப்பிரதேச மாநில காவல்துறையை எரித்து, அடக்கம் செய்த நிகழ்வு அனைவரையும் அதிர வைத்தது. பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தாரை சந்திக்க சென்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு, தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டனர்.

மீண்டும் அடுத்தநாள் அவர்கள் குடும்பத்தாரை சந்திக்க அனுமதிக்கப்பட்டனர். இந்தநிலையில்   இந்த சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும், போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் திமுகவும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி இன்று ஆளுநர் மாளிகையை நோக்கி கண்டன பேரணி நடத்த திமுக மகளிரணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திமுக மகளிர் அணி செயலாளரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி தலைமையில் இந்த பேரணி நடைபெற இருக்கின்றது. கொரோனா காலத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கை மீறி  திமுக தலைவர் கிராம சபை கூட்டம் நடத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதே போல இந்த பேரணியும் காவல்துறை அனுமதி மீறி நடைபெறுவதால் அரசு எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கும் என்று பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *