தோட்டத்திற்கு சென்று கொண்டிருந்த மூதாட்டி…. வழியில் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கார் மோதி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆட்சியூர் ராம்நகர் பகுதியில் பழனிசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெள்ளையம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் வெள்ளையம்மாள் வீட்டில் இருந்து தோட்டத்திற்கு செல்ல தாராபுரம் ஒட்டன்சத்திரம் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது தேனி மாவட்டத்திலுள்ள போடிநாயக்கனூர் பகுதியில் வசிக்கும் தனியார் நிறுவன தொழிலாளியான சுரேஷ்குமார் என்பவர் தனது குடும்பத்துடன் காரில் கோவையில் இருந்து புறப்பட்டு தாராபுரம் வழியாக ஒட்டச்சத்திரம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது சுரேஷ்குமாரின் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையை கடக்க முயன்ற வெள்ளையம்மாளின் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த வெள்ளையம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்த அருகிலிருந்தவர்கள் இதுகுறித்து தாராபுரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வெள்ளையம்மாளின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காரை ஓட்டி வந்த சுரேஷ்குமாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *