தலைகுப்புற கவிழ்ந்த கார்…. கோரவிபத்தில் பறிபோன உயிர்கள்…. ஈரோட்டில் பரபரப்பு….!!

கார் கவிழ்ந்த விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் பகுதியில் மாரிமுத்து என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு யுவராணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு நாகேந்திரன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மாரிமுத்து, யுவராணி, நாகேந்திரன் மற்றும் அவர்களுடைய உறவினர்களான அருண், ரஞ்சித் குமார் ஆகியோர் சத்தியமங்கலத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு துக்கம் விசாரிப்பதற்காக காரில் சென்றுள்ளனர்.

இந்நிலையில் துக்கம் விசாரித்துவிட்டு அவர்கள் மீண்டும் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது கார் கட்டுபாட்டை இழந்து அங்கிருந்த கோவில் அருகே தலைகுப்புற கவிழ்ந்தது. இதனைப் பார்த்த அருகிலுள்ளவர்கள் ஓடிவந்து பலத்த காயமடைந்த நாகேந்திரன் மற்றும் அருண் ஆகியோரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே நாகேந்திரன் மற்றும் அருண் ஆகிய இருவரும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அவர்கள் இருவரின் சடலத்தை கைப்பற்றி பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் இந்த விபத்தில் மாரிமுத்து, யுவராணி, ரஞ்சித் குமார் ஆகியோருக்கு இலேசான காயம் ஏற்பட்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த சித்தோடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *