“காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து” பணியாளர்கள் 4 பேர் பரிதாப பலி..!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே   காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் பஞ்சாலை பணியாளர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.  

ஈரோடு – திருப்பூர் எல்லையில் ஆலத்தூர் மேடு பகுதியில் இருக்கும்  பஞ்சாலையின் உதவி மேலாளராக ஜெய்கணேசும்,  மேற்பார்வையாளர்களாக கோவிந்தராஜ், தங்கபாண்டியன், பாரதிராஜா, வீரராகவன், சங்கர் ஆகிய 6 பேரும் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவரும் நள்ளிரவு பணிமுடிந்த பின் 1:30 மணியளவில்  புஞ்சைபுளியம்பட்டி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். காரை கோவிந்தராஜ் ஒட்டி சென்றபோது சத்தியமங்கலம் பொன் மேடு என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை வளைவின் போது வலப்பக்கம் ஏறிச் சென்றதாகச் சொல்லப்படுகிறது.

Image result for விபத்து

அப்போது எதிரே வந்து கொண்டிருந்த காபி கொட்டை ஏற்றி வந்த லாரி மீது கார் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் ஜெய்கணேஷ், தங்கபாண்டியன், சங்கர் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த வீரராகவன், கோவிந்தராஜ், பாரதிராஜா ஆகிய மூவரும் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி  வைக்கப்பட்டனர்.

ஆனால் அவர்களில் ஒருவரான வீரராகவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த புஞ்சைபுளியம்பட்டி போலீசார்  தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்துக்கு காரணம் கார் ஓட்டுநர் உறக்க கலக்கத்தில் இருந்ததே என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.