“வேடிக்கையாக விளையாடி வென்றோம்” விராட் கோலி கருத்து.!!

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது குறித்து கேப்டன் விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார்.   

ஐ.பி.எல்லில் நேற்று ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப்   அணியும்  பெங்களூரு  சின்ன சுவாமி  ஸ்டேடியத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் அஷ்வின் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணியில்  அதிரடியாக விளையாடிய ஏ.பி டிவில்லியர்ஸ் 44 பந்துகள் 82* ரன்கள்  (7 சிக்ஸர், 3 பவுண்டரி), குவித்தார். மேலும்  மார்கஸ் ஸ்டாய்னிஸ் 46* (34) ரன்களும், பார்த்திவ் பட்டேல் 43 (24)  ரன்களும் விளாசினர். இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்து  202 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணியில் மொஹம்மது சமி, முருகன் அஷ்வின், ஆர். அஷ்வின், வில்ஜோன் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

Seithi Solai

இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணியில் கே.எல் ராகுல் 27 பந்துகள் 42 ரன்களும்  (7 பவுண்டரி 1 சிக்ஸர்), அகர்வால் 35 (21) ரன்களும் குவித்தனர். இதையடுத்து அதிரடியாக விளையாடிய நிகோலஸ்  பூரன் 28 பந்துகள் 46 ரன்கள்   (5 சிக்ஸர், 1 பவுண்டரி) எடுத்தார். இறுதியில் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 185 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் பெங்களூரு அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Seithi Solai

இந்நிலையில் வெற்றி  குறித்து பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பேசினார். அப்போது அவர் பேசியதாவது எங்களின் ஒரே நோக்கம் அணிக்காக சிறப்பாக விளையாடுவது தான். நாங்கள் தொடர்ச்சியாக முதல் 6 ஆட்டத்தில் தோற்றது உண்மையிலேயே காயத்தை ஏற்படுத்தியுள்ளது. இது எங்களுக்கு ஒரு மிகப் பெரிய பாதிப்பு . இது போல் வேறு எந்த அணியும் தொடர்ந்து தோற்றது கிடையாது. கடைசியாக ஆடிய 5 ஆட்டத்தில் 4ல் வென்றுள்ளோம். 5 வென்று இருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருப்போம். நாங்கள் நாங்கள் எந்தவிதமான  நெருக்கடியிலும் விளையாடாமல் வேடிக்கையாக  விளையாடிதான் இந்த ஆட்டத்தை  வென்றோம். எப்படி ஆட வேண்டும் என்று  எங்கள் அணிக்கு  நன்றாக தெரியும் என்று அவர் கூறினார்.