சென்னை அணி 2வது வெற்றி ….. பவுலர்களை புகழ்ந்த டோனி….!!

 ஐ.பி.எல் 6வது லீக் போட்டியில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் நேற்று மோதியது. இந்த போட்டி டெல்லி பெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட் செய்து 6 விக்கெட் இழந்து 148 ரன்கள் குவித்தது. டெல்லி அணியில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 51 (47) ரன்கள் குவித்தார். பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணி 19.4 ஓவரில் 4 விக்கெட் இழந்து 150 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சென்னை அணியில் அதிகபட்சமாக  வாட்சன் 46 (26), டோனி 32 ரெய்னா 30 (16) , ரன்கள் குவித்தனர்.