மகர இராசிக்கு… “சமூகத்தில் அந்தஸ்து உயரும்”… கவனத்தை சிதறவிடாமல் செய்யுங்கள்..!!

மகரம் ராசி அன்பர்களே..!! இன்று உங்களுடைய தனித்திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள். சமூகத்தில் கூடுதல் அந்தஸ்து உருவாகும். தொழில் வியாபாரம் செழிக்க அனுகூல காரணி பலம் பெறும். கூடுதல் அளவில் பணம் வரவு கிடைக்கும். வழக்கு விவகாரங்களில் சமரசத் தீர்வு ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு எதிரியால் இருந்த தொல்லை குறையும்.. இன்று எதையும் செய்யும் முன்பு திட்டமிட்டுச் செய்யுங்கள். கவனத்தை சிதறவிடாமல் செய்யுங்கள்.

பயணங்கள் செல்லும்போது கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. மாணவர்கள் எதிலும் மெத்தனமாக செயல்படுவதை தவிர்ப்பதும் முன்னேற்றத்திற்கு உதவும். வீடு கட்ட பூமிபூஜை போடுவீர்கள். செல்வாக்கு உயரும். சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். அதுமட்டுமில்லாமல் பொதுக் காரியங்களை நீங்கள் சிறப்பாக செய்து முடிப்பீர்கள் அதனால் உங்களுக்கு சமூகத்தில் அந்தஸ்து உயரும்.

ஆலய வழிபாட்டை மேற் கொள்வீர்கள் தெய்வ நம்பிக்கையும் இன்று ஏற்படும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு சிறப்பு வாய்ந்த நிறமாகவும் அமையும். அதுமட்டுமில்லாமல் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு இன்றைய நாளை  தொடங்குங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை :  வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *