மகர இராசிக்கு… “குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்”…பொறுமையாக நடந்து கொள்ளுங்கள்..!!

மகரம் ராசி அன்பர்களே..!! இன்று தனவரவு தாராளமாக வந்து சேரும். தன்னம்பிக்கையோடு பணிபுரிவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். தொழில் வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். இன்று எதிர்பார்த்த படி பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவரின் செயல்பாடுகள் உங்களுக்கு கோபத்தை தூண்டுவதாக அமைய கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். பொறுமையாக நடந்து கொள்ளுங்கள். தொழில் வியாபாரத்தில் குறிப்பாக கூட்டுத் தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு எச்சரிக்கையாக செயல் படுவது நல்லது. வாடிக்கையாளரை அனுசரித்து செல்வதும் நல்லது. வியாபாரத்தில்  இன்று நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.

இன்று மாணவர்கள் சக மாணவர்களிடம் கவனமாக நடந்து கொள்ளுங்கள். கல்வியில் முன்னேற்ற வாய்ப்புகள் கிட்டும். ஏதேனும் சந்தேகம் இருப்பின் ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது நல்லது. படித்த பாடங்களை ஒரு முறைக்கு இரு முறை எழுதிப் பார்ப்பது நினைவில் வைத்துக் கொள்ள உதவும். இன்று நீங்கள் வெளியிடங்களுக்கு செல்லும் போதோ அல்லது முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுதோ பச்சை நிற ஆடை அல்லது பச்சை நிறத்தில் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாக இருக்கும். அது மட்டும் இல்லை நீங்கள் காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்குங்கள். உங்களுடைய கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்தும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை :  கிழக்கு

அதிஷ்ட எண் : 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் பச்சை நிறம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *