மகர இராசிக்கு… “வீண் பிரச்சினைகளில் தலையிடாதீங்க”… பஞ்சாயத்துக்கள் செய்ய வேண்டாம்..!!

சுய புத்தியும் மன தைரியமும் கொண்ட மகர ராசி அன்பர்களே..!! இன்று பொருமையோடு செயல்பட்டு பெருமை காண வேண்டிய நாளாகயிருக்கும். சான்றோர்களின் சந்திப்பு கிடைக்கும்.  திட்டமிட்ட பயணம் ஒன்றில் திடீர் மாற்றம் செய்வீர்கள். அதிகாரிகளின் அனுகூலம் உண்டாகும். இன்று குடும்பத்தில் உள்ளவர்களின் செயல்கள் மனவருத்தத்தை கொடுப்பதாக இருக்கலாம். கவனமாக கையாள்வது நல்லது. பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நன்மையை கொடுக்கும். கணவன் மனைவிக்கிடையே திடீர் மன வருத்தம் ஏற்படும். அதை மட்டும் நீங்கள் கவனத்தில் கொள்ளுங்கள். எந்த விஷயமாக இருந்தாலும் உட்கார்ந்து பேசி தீர்த்துக் கொள்ளுங்கள். பொறுமையை மட்டும் கையாளுங்கள். உங்களது பொருட்களை நீங்கள் கவனமாக பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

வீண் பிரச்சினைகளில் தலையிடாமல் ஒதுங்கி விடுவதும் நன்மையை கொடுக்கும். யாருக்கும் எந்தவிதமான பஞ்சாயத்துக்கள் செய்ய வேண்டாம். இன்று மாணவர்கள் கொஞ்சம் கடினமாக உழைத்துத்தான் முன்னேற வேண்டியிருக்கும். விளையாட்டில் ஆர்வம் செல்லும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போதோ முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுதோ வெள்ளை நிற ஆடை அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே காலையில் நீங்கள் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய  நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் இளம் மஞ்சள் நிறம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *