” வெளியில் இருந்து வந்த வேட்பாளர் ” வாரிசு அரசியல் குறித்து கனிமொழி பதில் …!!

புதிதாக வெளியில் இருந்து கொண்டு வந்த வேட்பாளர்களுக்கு வாய்ப்பளிக்கவில்லை என்று வாரிசு அரசியல் குறித்து தூத்துக்குடி மக்களவை வேட்பாளர் கனிமொழி பதிலளித்துள்ளார்.

திமுக தலைமையிலான மதற்சார்பற்ற முற்போக்கு கூட்டணி போட்டியிடும் 20 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அக்கட்சியின் தலைவர் முக.ஸ்டாலின் நேற்று மாலை திமுக தலைவர் முக.ஸ்டாலின் வெளியிட்டார். அதில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி சார்பில் திமுக_வின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி போட்டியிடுகின்றார். இந்நிலையில் வேட்பாளர் கனிமொழி அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களையும் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Image result for கனிமொழி

இந்நிலையில் இன்று சென்னை அண்ணாநகரில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை சந்தித்து வாழ்த்து பெற்ற கனிமொழி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது அவர் கூறுகையில் , தூத்துக்குடியில் அரசு சார்பில் மிகப் பெரிய வன்முறை ஸ்டெர்லைட் பிரச்சினை போராடிக் கொண்டிருந்த மக்கள் மீது கட்டவிழ்த்து விடபட்டது. வேலைவாய்ப்பு ,  விவசாயிகள் பாதிப்பு உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளையும் முன்வைத்து பிரச்சாரங்களை மேற்கொள்வேன். புதிதாக வெளியிலிருந்து கொண்டு வந்து யாருக்கும் வாய்ப்பளிக்கப்படவில்லை , வாரிசு என்ற ஒரே காரணத்திற்காக வாய்ப்பு மறுக்கப்பட வேண்டும் என்பது நியாயமற்றது என்று கனிமொழி தெரிவித்தார்.