வாட்ஸ் – அப்பிற்கு வந்த குறுஞ்செய்தி…. ஆசிரம நிர்வாகிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. தேனியில் பரபரப்பு….!!!

மருந்து கொள்முதலில் பங்கு தருவதாக கூறி ஆசிரம நிர்வாகியிடம் மோசடியில் ஈடுபட்ட நைஜீரியா நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தேனி மாவட்டத்திலுள்ள சின்னமனூர் பகுதியில் சுவாமி ரிதம்பர நந்தா என்பவர் வசித்து வருகின்றார். இவர் அனாதை ஆசிரமம் நடத்தி வருகின்றார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருடைய செல்போன் எண்ணுக்கு வாட்ஸ் – அப் மூலம் ஒரு பெண்ணின் பெயரில் குறுஞ்செய்தி வந்தது. அந்தப் பெண் தன்னை இங்கிலாந்தில் ஒரு தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் மேலாளராக இருப்பதாக அறிமுகம் செய்து கொண்டார்.

மேலும் அவர் டாக்டர் கருணா என்பவரிடம் புற்று நோய்க்கு மருந்து தயாரிக்க பயன்படுத்தும் எண்ணெய் மூலப்பொருளாக இருப்பதாகவும் தெரிவித்தார். அதுமட்டுமல்லாது 2 லிட்டர் கொள்முதல் செய்து டெல்லியில் பரிசோதனை செய்யும் பணிக்கு நியமிக்கப்பட்ட ஹரிசன் என்பவரிடம் கொடுத்துள்ளோம். எனவே அவர் 1000 லிட்டர் கொள்முதல் செய்வதற்கான முன் பதிவு தொகையையும் கொடுப்பார் என ஆசைவார்த்தை கூறினார்.

இதன்மூலம் கிடைக்கும் பங்கு தொகையால் நல்ல வருமானம் கிடைக்கும் என கூறி சுவாமி ரிதம்பரா நந்தாவை சம்மதிக்க வைத்தார். இதனை நம்பிய ரிதம்பர நந்தன் 3 1/2 இலட்சத்திற்கு 2 லிட்டர் மருந்து மூலப்பொருள் எண்ணெய் முன்பதிவு செய்ததால் அவருக்கு கொரியர் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. அதை பெற்றுக் கொண்டு டெல்லிக்கு நேரில் சென்று ஹரிசனிடம் கொடுத்தார். ஆனால் அவர் 23 லிட்டர் கொண்டு வந்ததால் தான் 1000 லிட்டர் காண முன்பதிவு மற்றும் பங்கு தொகையை கொடுக்க முடியும் என்று கூறினார்.

இதனால் அவர் என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறி அங்கிருந்து திரும்பி வந்து விட்டார். பின்னர் சுவாமி ரிதம்பரா நந்தா வாட்ஸ் – அப் எண்ணிற்கு தொடர்பு கொண்ட நபரை மீண்டும் அழைத்த போது அந்த எண் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. அதன் பிறகே சுவாமி ரிதம்பரா நந்தா தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். இதனையடுத்து அவர் தேனி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் நைஜீரியாவை சேர்ந்த நபர் பெண் போன்று வாட்ஸ் – அப் மூலம் தொடர்பு கொண்டது தெரியவந்தது. மேலும் அவர் மராட்டிய மாநிலம் நலசுபரா பகுதியில் வசித்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. தற்போது அவர் மும்பையில் பதுங்கி இருப்பதாகவும் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

எனவே தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் மும்பைக்கு விரைந்து சென்று அங்கு பணியில் இருந்த நைஜீரியாவை சேர்ந்த ஒலாடிய மேத்யூ என்பவரை கைது செய்ததோடு அவரிடமிருந்த 3  மடிக்கணினி, 4 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து கைதான அவரை தேனிக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த மோசடியின் பின்னணியில் உள்ள மற்ற நபர்கள் குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *