குடியிருப்பு பகுதியில் தீ விபத்து…. இரு இளம்பெண்கள் பலி…. பொதுமக்கள் அஞ்சலி….!!

கனடாவில் குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. 

கனடாவின் நோவா ஸ்கோடியா மாகணத்தில்  இரண்டுமாடி குடியிருப்பு பகுதியில் இரவு நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதனை தொடர்ந்து புரூக்ஸைட் தெருவின் குடியிருப்புக்கு நள்ளிரவு 2 மணியளவில் போலீசார் வந்துள்ளனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட போது 2 நபர்கள் தீ விபத்தில் சிக்கி பலியானது உறுதி செய்யப்பட்டது.

மேலும் ஒருவர் காயங்களுடன் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறிப்பாக தீயில் சிக்கி உயிரிழந்த இளம் பெண்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது தெரிய வந்துள்ளது. அதுமட்டுமின்றி இவர்களில் Madison Kelly-க்கு 16 வயது என்றும் Brea McKenzie-க்கு 15 வயது என்பதும் அடையாளம் காணப்பட்டுள்ளது. தற்போது இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று உயிரிழந்த 2 பெண்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் விபத்து ஏற்பட்ட இரண்டுமாடி குடியிருப்புக்கு வெளியே நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் இருவருக்கும் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். அதோடு Brea McKenzie-ன் தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது சிகிச்சை செலவுகளுக்காக நிதி திரட்டி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *