
சுற்றுலா என்பது ஒரு மனிதனுடைய வாழ்வில் முக்கியமான ஒன்றாகும். இது வழக்கமான வாழ்விடத்தை விட்டுவிட்டு ஓய்வு, மகிழ்ச்சி, பொழுதுபோக்கு என்ற நோக்கில் ஒரு வருடத்திற்குள் வேறு இடங்களுக்கு சென்று வருவது ஆகும். பல உலக நாடுகளில் சுற்றுலா என்பது முக்கிய தொழில் துறையாக விளங்குகிறது. அந்த வகையில் தற்போது வெளியான வீடியோ ஒன்று சுற்றுலாவிற்கு செல்லும் ஆர்வத்தை தூண்டியுள்ளது.
அதாவது தாய்லாந்தில் ஒரு நபர் செலவை குறைக்கும் விதமாக வித்தியாசமான முறையில் சவாரி செய்த சம்பவம் அனைவரது கண்ணையும் கவர்ந்துள்ளது. இந்த நிகழ்வு தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றால் இது போல் செலவை குறைக்கும் வகையில் இருசக்கர வாகனத்தில் செல்லுங்கள் என்று கூறும் வகையில் இருக்கிறது. அதாவது தாய்லாந்து நாட்டில் சுற்றுலா பயணி ஒருவர் ஒரு இருசக்கர வாகனத்தில் அமர்ந்து கொண்டு தன்னுடைய 2 பயண பெட்டிகளையும் வாகனத்தின் இரு புறங்களிலும் வைத்துக் கொண்டு செல்கிறார்.
இவர் சுமைகளை சவாரி பயணத்திற்கு ஏற்றவாறு வாகனத்தின் பின்னால் அமர்ந்து கொண்டு செல்கிறார். இதை பார்க்கும் போது பயண செலவை குறைக்கும் மிகச்சிறந்த யுத்தியாக இருக்கிறது. இந்த காட்சிகள் “traveltips”என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் இதனை பாராட்டி வருகின்றனர். மேலும் இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களிலேயே 8499-க்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Instagram இல் இந்தப் பதிவைக் காண்க