“860 மரங்களை வெட்டி மகளின் திருமணம்” மரம் வளர்க்க சொல்லி தண்டனை…!!

மகளின் திருமண செலவுக்கு 860 மரங்களை வெட்டிய நபருக்கு வனத்துறையினர் மரம் வளர்க்க சொல்லி தண்டனை விதித்துள்ளனர்.

1000 பொய்களை சொல்லி ஒரு கல்யாணம் முடிக்கலாம் என்பது பழமொழி ஆனால் 1000 மரங்களை வெட்டி தனது மகளின் கல்யாணத்தை முடித்து வைத்த சம்பவம் விநோதத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தை சேர்ந்த தஷரத் குர்ஹதே , தனது மகளின் திருமண செலவிற்காக 860 மரங்களை வெட்டியுள்ளார். அனுமதி இல்லாமல் மரங்களை வெட்டி விற்பதாக வனத்துறை_ யினருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த வனத்துறையினர் இது தொடர்பாக தஷரத் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

மகளின் திருமணத்திற்காக 860 மரங்களை வெட்டிய நபர் -வனத்துறையினரின் அதிரடி தண்டனை

இது தொடர்பாக வனத்துறையினர் நடத்திய விசாரணையில் ,  தஷரத் தனது மகளின் திருமண செலவிற்கு பணம் இல்லாத காரணத்தால் மரங்களை வெட்டி செலவு செய்து மகளின் திருமணத்தை முடித்ததாக ஒப்புக்கொண்டார்.  இதுவரை சுமார் 860 மரங்களை வெட்டியுள்ளதை விசாரணை மூலம் உறுதி செய்து கொண்ட வனத்துறை அதிகாரிகள் தஷரத்துக்கு 4 மாதங்களுக்குள் வெட்டிய மரங்களை விட இரு மடங்கு மரங்களை நட வேண்டும் என்றும் , அதை செய்யவில்லை என்றால் அதற்கான பணத்தை வனத்துறையிடம் செலுத்த வேண்டும் என்று தண்டனை வழங்கியுள்ளனர்.

Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *