தேனி மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் கேமரா மேன் சிவா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தேனி மாவட்டத்திலுள்ள உத்தமபாளையம் அருகே இருக்கும் கோம்பையில் தனியார் தொலைக்காட்சி சீரியல் படப்பிடிப்பு நடந்துள்ளது. இப் படப்பிடிப்பிற்கு வந்தவர்கள் அனைவரும் கோம்பை ரெங்கநாதர் கோவில் சாலை வழியாக வாகனத்தில் திரும்பி சென்றனர். அப்போது அவர்கள் சென்ற வாகனம் திடீரென நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சென்னையை சேர்ந்த ஸ்டில் கேமரா மேன் சிவா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதில் பயணம் செய்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், கொம்பன், கருப்பன் உட்பட பல படங்களில் நடித்த நடிகர் குரும்பன் படுகாயமடைந்தார். அவர் உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். உயிரிழந்த சிவாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.