“மொஹரம்” ஹிஜ்ரா என்னும் இஸ்லாமிய புத்தாண்டின் தொடக்க வரலாறு…!!

ஹிஜ்ரி என்றழைக்கப்படும் புதிய இஸ்லாமிய வருடம் தொடங்கிய வரலாற்றை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

ஹிஜ்ரி என்பது இஸ்லாமின் தொடக்கம் அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஹிஜ்ரா எனும் சம்பவம் வள்ளலார் நபிகள் நாயகம் அவர்கள் செல்லும் வழியில் நடந்த ஒரு தியாக சம்பவம் அதைக் கொண்டே ஹிஜ்ரி ஆண்டு கணக்கிடப்படுகிறது. ஹிஜ்ரா என்ற அரபுச் சொல்லுக்கு பயணம் என்பது பொருள். இவ்வுலகில் முதன் முதலாக ஹிஜ்ரா என்னும் பயணம் மேற்கொண்டவர் இப்ராஹிம் நபி அவர்கள் தான்.

இறைவனின் இறுதித் தூதர் முகமது நபி தனது தோழர்களுடன்  சொந்த பந்தங்களை விட்டு, ஈட்டிய பொருளை விட்டு, நாட்டை விட்டு, ஓட்டிய வாகனங்களை விட்டு, தன் மக்களை விட்டு பிறந்து வளர்ந்த வாழ்ந்த ஊரை விட்டு பிரிந்த அரும் பெரும் தியாகங்கள் மிகுந்த சம்பவம் ஹிஜ்ரா பயண. நபிகளும் அபிமானம் கொண்ட நபித்தோழர்களும் தீம் என்னும் ஒளியை நெஞ்சில் ஏந்தி எல்லாம் வல்ல இறைவனாகிய அல்லாஹ்விற்க்காக மக்க மாநகரத்தில் இருந்து கிளம்பி 300 மைல் தொலைவில் எத்ரிஷ் நகருக்கு மேற்கொண்ட பயணம்தான் ஹிஜ்ரி ஆண்டின் தொடக்கம்.

அதுவரை எத்ரிஷ் என்று அழைக்கப்பட்ட அந்த நகரம் நபிகள் நகரம் என்று பொருள்படும்படி ஆயிற்று. ஹிஜ்ரி ஆண்டு கணக்கு 17 ஆண்டுகளுக்குப் பின்னரே வழக்கத்திற்கு வந்தது. அண்ணல் நபிகள் நாயகம் மறைவிற்குப் பின்னர் அபூபக்கர் சித்திக் அல்லா அவர்களும் அவருக்குப் பின் உமர் அலி அவர்களும் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றார்கள். நீதியும் நிர்வாகத் திறனும் வீரமும் கொண்ட சரத்குமார் அவரது ஆட்சியில் பல சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இக்காலகட்டத்தில் அராபிய மக்கள் பின்பற்றி வந்த யானை ஆண்டு என்னும் பழைய ஆண்டு முறையை கைவிட்டு பல்வேறு சிக்கல்கள் எழுந்தன. இதனை அடுத்து ஒரு புதிய ஆண்டிலே இதனை கடைபிடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதற்கான ஆலோசனையும் நடைபெற்றது. அதில் நபிகளின் பிறந்த மாதத்தை கொண்டு இஸ்லாமிய ஆண்டை கணக்கிடலாமா? திருமறையான் குரான் அருளப்பட்ட மாதத்தை கொண்டு கணக்கிடலாமா? என்றெல்லாம் பல ஆலோசனைகள் நடைபெற்றன. இறுதியில் பெரும்பான்மையான ஆலோசனைப்படி ஹிஜ்ராவை அடிப்படையாகக் கொண்டு புதிய ஆண்டு வழக்கத்திற்கு வந்தது.

ஹிஜ்ரா நடந்து 17 ஆண்டுகளில் இப்புதிய முறை வந்ததால் அவ்வாண்டு ஹிஜ்ரி7 என்று கணக்கிடப்பட்டது. ஆண்டின் முதல் மாதமாக ஹிஜ்ரா நிகழ்ந்த மொஹரம் வழக்கத்திற்கு வந்தது. அன்று நடைமுறைக்கு வந்த ஹிஜ்ரி இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தியாக உணர்வு ஓய்வதில்லை தியாகங்கள் அழிவதில்லை, தியாகங்கள் மனித மனங்களில் இருந்து மறைந்து போவதில்லை என்று ஹிஜ்ரா ஆண்டு பிறப்பு நமக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது. அனைவருக்கும் மொஹரம் பண்டிகை நல்வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *