8826 காவலர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு…..!!

காவல்துறை , சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை_யில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு பணி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பில் காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை உள்ளிட்ட சீருடைப்பணியிடங்களில் உள்ள காலியிடங்கள் நிரப்ப  படுகின்றது.இதனால் தமிழ்நாடு காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறையில் உள்ள இரண்டாம் நிலை காவலர் காலிப்பணியிடங்களுக்க்கான 8826 பணியிடங்களுக்காக  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடத்தில் காவல்துறையில் 8427  பணியிடமும் , மாவட்ட / மாநர ஆயுதபடையில் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு 2465 பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த பணியிடங்களில் சிறைத்துறையில் 186 பணியிடத்தில் ஆண்களும் , 22 பணியிடத்தில் பெண்களும் என்று 208  பணியிடங்கள் நிரப்பட உள்ளது. தீயணைப்புத்துறை 191 காலியிடங்களும்  நிரப்பட உள்ளது.மேலே காணும் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப் படுபவர்களுக்கு ரூ.18200 – 52900 என்ற விகிதத்தில் சம்பளம் வழங்கப்படும் ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்னப்பிக்க 10-ம் வகுப்பு படித்திருந்தால் போதும்  , வயது வரம்பு  ( 01-07-2019 ) அன்று 18 வயது பூர்த்த்தியடைந்து , 24 வயதுக்கு மேற்படாமல் இருக்க வேண்டும்.

BC / MBC _க்கு உச்ச வயது வரம்பு 26 ஆகவும், SC / ST_க்கு  உச்ச வயது வரம்பு 29 ஆகவும், ஆதரவற்ற விதவைகளுக்கு உச்ச வயது வரம்பு 35 ஆகவும்  இருக்க வேண்டும்.எழுத்து தேர்வு , உடற்தகுதி தேர்வு மூலமாக விண்ணப்பதார்கள் தேர்வு செய்யப்பட இருக்கின்றார்கள் .மேலும், முழு விபரங்களை தெரிந்து கொள்ள www.tnusrbonline.com என்ற இணையதளத்தை தொடரவும் .

Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *