கொல்கத்தா டெல்லி ஆட்டம் ஸ்கோர் சமன்…… சூப்பர் ஓவர் ஆட்டமாக மாறியது….!!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதிய ஆட்டத்தின் ஸ்கோர் சமன் செய்யபட்டத்தால் சூப்பர் ஓவர் ஆட்டம் நடைபெற்றது.

12 ஐ.பி.எல் திருவிழாவின் 10-ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. இவ்விரு அணிகளுக்கிடேயேயான  போட்டிடெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது.  டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக  ஆண்ட்ரே ரஸெல் அதிரடியாக விளையாடி  28 பந்துகளில் 62 ரன்கள்( 6 சிக்ஸர், 4 பவுண்டரி) விளாசினார்.  தினேஷ் கார்த்திக்கும் அதிரடியாக விளையாடி 36 பந்துகளில் 50 ரன்கள் குவித்தார்.

Seithi Solai

பின்னர் 186 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல் அணியின் தொடக்க வீரர் பிருத்வி ஷா அதிரடி ஆட்டத்தினால் டெல்லி அணி ரன் குவித்தது. அதே போல  ஷ்ரேயஸ் ஐயர் 43 ரன் குவித்தார். சதம் என்று எதிர்பார்க்கப்பட்ட பிருத்வி ஷா 99 ரன்னில் ஆட்டமிழக்க அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 185 ரன் எடுத்து ஸ்கோரை சமன் செய்தது. இதையடுத்து சூப்பர் ஓவர் என்ற முறையில் ஆட்டம் தொடங்கியது. இது இந்த IPL தொடரில் நடைபெற்ற முதல் சூப்பர் ஓவர் இதுவாகும்..