முட்டைகோஸ் சூப்
தேவையான பொருட்கள் :
முட்டைகோஸ் – 1 கப்
இஞ்சி,பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
மிளகு – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, மிளகு, சீரகம், இஞ்சி,பூண்டு விழுது, உப்பு சேர்த்து வதக்க வேண்டும் . பின் இதனுடன் நறுக்கிய முட்டைகோஸ் , தண்ணீர் விட்டு கொதிக்க விட வேண்டும். நன்கு கொதித்து வாசம் வந்ததும், இறக்கி பரிமாறினால் முட்டைகோஸ் சூப் தயார் !!!