#ByElectionCandidate: ஈரோட்டில் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை!!

ஈரோடு இடைத்தேர்தலுக்கான வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பாக தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.இடைத்தேர்தல் வேட்பாளராக யாரை தேர்வு செய்யலாம் என்பது குறித்து தற்போது ஆலோசனை நடைபெற்று வருகிறது.

ஈரோடு அருகே வில்லரசம்பட்டியில் உள்ள தனியார் ஓட்டலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறும் ஆலோசனையில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, கே.சி கருப்பண்ணன் பங்கேற்றுள்ளனர்.இதில் தமிழ் மாநில காங்கிர மாநில காங்கிரஸ் இளைஞர் அணி நிர்வாகி யுவராஜ் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் விடியல் சேகரும் பங்கேற்றுள்ளார்.