வாங்க… வாங்க… “சுவையானது ருசியானது” கிராம மக்களுக்கு டீ போட்டு அசத்திய முதல்வர்..!!

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அம்மாநிலத்தில் உள்ள கடற்கரை கிராம மக்களுக்கு தன் கைகளால் தேனீர் தயாரித்து விநியோகிக்கும் வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சமீபகாலமாக அரசியல் கட்சிகள் தலைவர்கள் சாமானிய மக்களுடன் நெருங்கிப் பழகுவது போன்ற காட்சிகள் அடிக்கடி இணையதளத்தில் வைரலாகி வருகிறது உதாரணமாக மக்களவை தேர்தல் காலங்களில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த மன்சூர் அலிகான் அவர்கள் நாள்தோறும் துப்புரவு பணியாளர் பதநீர் விற்பவர் உள்ளிட்ட செய்முறைகள் மூலம் மக்களுடன் நெருங்கிய நிலையில் பழகி அதனை விடியோவாக எடுத்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டார்.

Image result for தேநீர் மம்தா

அந்தவகையில் மேற்கு வங்கத்தில் உள்ள ஒரு கடற்கரை கிராமத்திற்கு சென்ற அவர் உள்ளூர் மக்களுடன் நெருங்கி பேசிய பின் அங்கிருந்த தேநீர் கடையில் தேநீர் தயாரித்து சுற்றி இருந்தவர்களுக்கு விநியோகம் செய்துள்ளார். இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு சில நேரங்களில் இது போன்ற சின்ன சின்ன விஷயங்கள் நமது வாழ்வில் மகிழ்ச்சியை கொண்டு வரும் என மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.