ஆத்தாடி இவ்ளோவா விடுதி கட்டணம் … தப்பி ஓடிய தொழிலதிபர் ..!!

தாஜ் பஞ்சாரா  விடுதியில்  102 நாட்கள் தங்கிவிட்டு கட்டணத்தை செலுத்தாமல் சென்றதால் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .

ஆந்திரமாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் சங்கர் நாராயணன் . இவர் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள தாஜ் பஞ்சாரா நட்சத்திர  விடுதியில் தங்கி  இருந்தார் . அவ்விடுதியில் இவர் 102 நாட்கள் தங்கியிருந்ததோடு விடுதியின் சேவைகளையும் அனுபவித்து வந்தார் . பின்னர் 26 லட்சம் கட்டணம் செலுத்துமாறு விடுதி நிர்வாகம் அவரிடம் ரசீதை கொடுத்துள்ளது.

Image result for taj banjara hotel in hyderabad

ஆனால் 13 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலுத்தினார் . அதன்பின் மீதி 12 லட்சம் ரூபாய் செலுத்தாமல் தப்பி ஓடிவிட்டதாக விடுதி நிர்வாகம் கூறியது. அதனைத் தொடர்ந்து அந்த நபரின் செல்போன் நம்பருக்கு விடுதி நிர்வாகம் தொடர்பு கொண்டு பேசியபோது மீதப் பணத்தை செலுத்துவதாக கூறினார் . ஆனால் அதன்பிறகு அவரது போன் நம்பர் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது . ஆகையால் பஞ்சாரா விடுதி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளது.

Image result for taj banjara hotel in hyderabad

அதன்பின் புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் . அதனைத் தொடர்ந்து விசாரணையில் சங்கர் நாராயணன் தான் முழுதொகையையும் செலுத்தி விட்டதாகவும், தன்மீது  அபாண்டமாக குற்றம் சாட்டும் விடுதியின் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் சங்கர் நாராயணன் கூறியுள்ளார்.