சினிமாவை மிஞ்சிய கொடூரம்… காவல் நிலைய வாசலிலே தொழிலதிபர் வெட்டி கொலை..!!

தூத்துக்குடியில் சினிமாவை மிஞ்சும் வகையில் காவல் நிலையம் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

நெல்லை பாளையங்கோட்டை கேடிசி நகரை சேர்ந்தவர் சிவகுமார்.  ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர் மீது கொலை வழக்கு ஒன்று நிலுவையில் இருப்பதாகவும், பல்வேறு நிலையில் தொழில் போட்டி இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் அருகில் உள்ள தனது அண்ணன் முத்துக்குமார் அலுவலகத்திற்கு சென்று விட்டு சிவகுமார் திரும்பியுள்ளார்.

Image result for வெட்டி கொலை

அப்போது அங்கிருந்து ஆட்டோவில் இருந்த சிலர் கொடுத்த தகவலின் பேரில் 5 இரு சக்கர வாகனங்களில் மர்ம நபர்கள் வந்ததாகவும், அவர்கள் சிவக்குமாரை சரமாரியாக வெட்டிவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி ஓடியதாகவும் கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த சிவக்குமார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். பட்டப்பகலில் காவல் நிலையம் அருகே அரங்கேறிய இந்த கொலை சம்பவம் குறித்து தென்பாகம் காவல் நிலைய அதிகாரிகள்விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சம்பவ இடத்தை ஆய்வு செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் விசாரணையை துரிதப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.