பள்ளத்தில் கவிழ்ந்த சொகுசு பேருந்து…. 19 பேர் பலி…. வங்காளதேசத்தில் பெரும் சோகம்….!!!!

வங்காளதேச நாட்டில் ஷிப்சர் என்ற மாவட்டத்தில் சொகுசுபேருந்து ஒன்று இன்று காலை 8 மணிக்கு புறப்பட்ட சென்றது. இந்த பேருந்தில் 40 பேர் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் பேருந்து புதிதாக கட்டப்பட்ட எக்ஸ்பிரஸ் சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணித்த 19 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியும் 25 பேர் படுகாயமடைந்தும் உள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply