கூடுதல் பஸ் வேண்டும்…. சாலை மறியலில் ஈடுபட்ட மாணவ – மாணவிகள்…. பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள்….!!!

கூடுதல் பேருந்து இயக்க கோரி மாணவ – மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கரம்பக்குடியிலிருந்து நாள்தோறும்  வெட்டிக்காடு வழியாக ஒரத்த நாட்டில் அமைந்திருக்கும் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ – மாணவிகளும், பணிக்காக பொதுமக்களும் சென்று வருகின்றனர். இந்நிலையில் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அதிகமாகி விடுகிறது. எனவே வெட்டிக்காடு, சக்கரக்கோட்டை, நெடுவாக்கோட்டை உள்ளிட்ட கிராமங்களில் பேருந்துகள் நிற்காமல் சென்று விடுகின்றன.

ஆகவே கூடுதல் பேருந்துகள் கல்லூரி, பள்ளி பணிக்கு செல்லும் வேளையில் காலையும் மாலையும் இயக்கவேண்டும் என மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கூடுதல் பேருந்து இயக்கப்படுவதாக உறுதி அளித்தனர். அதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ – மாணவிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *