”ரூ17,60,00,000” பங்களா ஜப்தி….. சிக்கிய பாப் பாடகி….!!

வரி ஏய்ப்பில் சிக்கிய பாப் பாடகியின் ரூ.17½ கோடி மதிப்பிலான பங்களாவை ஜப்தி செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் பிரபல பாப் பாடகி கேட்டி பிரைஸ். இவர் பாடகியாக மட்டுமின்றி  மாடல் அழகி, எழுத்தாளர் , தொழில் அதிபர் என்று பன்முக திறமைகளை கொண்டு வலம் வந்தார். கேட்டி பிரைஸ் பல்வேறு வகைகளில் வருமான சம்பாதித்த நிலையில் அதற்கான வரியை முறையாக செலுத்தவில்லை என்ற குற்றசாட்டு எழுந்தது.இது தொடர்பாக கேட்டி_யிடம் அதிகாரிகள் பலமுறை முறையிட்டும் கேட்டி பிரைஸ் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

 இதையடுத்து பூதாகரமாக வெடித்த இந்த சம்பவத்தால் கேட்டி பிரைசுக்கு சொந்தமான 2 மில்லியன் பவுண்டு (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.17 கோடியே 60 லட்சத்து 54 ஆயிரம்) மதிப்பிலான சொகுசு பங்களாவை ‘ஜப்தி’ செய்து நடவடிக்கை எடுக்க  நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த கேட்டி பிரைஸ்ஜப்தி நடவடிக்கையை தவிர்க்க 22,000 பவுண்டு வரி தொகையை கட்டுவதாக முன்வந்து வாக்குறுதி அளித்தார். ஆனால் மீண்டும் காலம் தாழ்த்திய நிலையில் அவரது சொகுசு பங்களாவை ஜப்தி செய்ய மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை லண்டனில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அடுத்த மாதம் 14-ந்தேதி விசாரணை வருகின்றது.