பும்ராவை காதலித்து வருவதாக வதந்தி பரவிய நிலையில் “இருவருமே நல்ல நண்பர்கள்” என்று அனுபமா பதிலளித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் சினிமா நடிகைகள் காதலிப்பதாக வதந்திகள் மற்றும் சர்ச்சைகள் எழுவது வழக்கமான ஓன்று. இவற்றில் சில நிஜமாகவும் மாறியிருக்கின்றன.அந்த வகையில் இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரும், உலகின் நம்பர் 1 சிறந்த பவுலரான ஜஸ்பிரித் பும்ரா ஒரு நடிகையை காதலித்து வருவதாக வலைத்தளங்களில் வதந்தி எழுந்துள்ளது.

அந்த நடிகை யாரென்றால் மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன் தான். இவர் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். தனுஷ் நடித்த கொடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவரும் கிரிக்கெட் வீரர் பும்ராவும் ஒருவருக்கொருவர் காதலித்து வருவதாக வதந்திகள் பரவி வருகிறது. இவர்கள் இருவரும் வலைத்தளங்களில் ஒருவர் பதிவிடும் கருத்துக்களை மாறி மாறி கருத்து பதிவிட்டு வந்தனர். இதனால் இருவரும் காதலித்து வருகிறார்கள் என்று வதந்தி வலுவானது.
இந்நிலையில் அனுபமா இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், “நானும் பும்ராவும் காதலிக்கவில்லை. இருவருமே நல்ல நண்பர்கள்” என்று பதிலளித்துள்ளார். ஏற்கனவே மாதங்களுக்கு முன்பு மற்றொரு நடிகையான ராஷி கண்ணாவும், பும்ராவும் காதலித்து வருவதாக வதந்திகள் பரவியது. இதற்கு விளக்கம் அளித்த ராஷி கண்ணா, பும்ரா இந்திய கிரிக்கெட் வீரர் என்பது மட்டும் தான் எனக்கு தெரியும். அதை தவிர அவருக்கும் எனக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்று அவர் கூறியது” குறிப்பிடத்தக்கது..