#Budget2023: பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு…. இனி செல்போன், டிவி விலை குறையும் ….!!!

நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்த நிலையில் நேற்று இரண்டாவது நாளாக கூட்டம் தொடங்கியது. இதில் இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.

இதை தொடர்ந்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்கள் தொடர்பான பல்வேறு விதமான அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். அந்த வகையில் செல்போன் உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரி மற்றும் மின்சார வாகனங்களுக்கான பேட்டரி மீதான இறக்குமதி வரி போன்றவைகள் குறையும் என நிர்மலா சீதாராமன் அறிவித்தார். மேலும் இதன் காரணமாக செல்போன் மற்றும் டிவி விலைகள் குறைய வாய்ப்பு இருக்கிறது.